தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாகன விபத்துக்களில் 66 பேர் மரணம் - News View

Breaking

Wednesday, September 15, 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாகன விபத்துக்களில் 66 பேர் மரணம்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல் செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் பதிவான வாகன விபத்துக்களில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் செப்டம்பர் 13 ஆம் திகதி வரையிலான 3 வாரங்களில் மட்டும் பதிவான 63 விபத்து சம்பவங்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

இந்த விபத்துக்களில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்கள் காரணமாக பதிவான விபத்துக்கள் என சுட்டிக்காட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ, அவ்வாறான விபத்துக்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார்.

மொத்த விபத்துக்களில் 56 விபத்துக்கள் சாரதிகள், செலுத்துநர்களின் கவனயீனம் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும், ஒரே ஒரு விபத்து மட்டுமே தொழில் நுட்ப கோளாரினால் பதிவானது எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

இந்நிலையில் கவனயீனமாக வாகன செலுத்தல் மற்றும் அதிக வேகம் ஆகியன விபத்துக்களுக்கு பிரதான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment