எதிர்வரும் வாரத்தின் கிழமை நாட்களில் (05) ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டோபர் 04ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஒக்டோபர் 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் 5 நாட்களுக்கு கூடவுள்ளது.
ஒக்டோபர் 04ஆம் திகதி வாய்மொழி மூலமான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment