5,000 பொலிஸ் அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை - அமைச்சர் திலும் அமுனுகம - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

5,000 பொலிஸ் அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை - அமைச்சர் திலும் அமுனுகம

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் 15,000 பொலிஸ் அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சேர்ப்பு மாகாண மட்டத்தில் செய்யப்படும். இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் பொலிஸ் அதிகாரிகள் சமூக பொலிஸ் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தற்போதைய சூழலில் இலங்கை பொலிஸ் சேவையில் 85,000 பொலிஸார் பணிப்புரிவதுடன், இன்னமும் 28000 பேர் பொலிஸ் சேவைக்கு தேவையாக உள்ளனர். 

இதன் பிரகாரம் முதல்கட்டமாக 15000 பேரை இணைத்து பொலிஸ் சேவையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக்குவதற்கான அனுமதியை பாதுகாப்பு சபை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதுகுறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அரச முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பொலிஸ் சேவையில் உள்ள வசதிகளின்படி, வருடத்திற்கு 5000 அதிகாரிகளுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க முடியும். எதிர்காலத்தில் இராணுவத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி 15,000 மற்றும் 10,000 பேர் கொண்ட இரண்டு குழுக்களை பயிற்சியளித்து சேவையில் இணைத்துக்கொள்ள உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment