மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலேயே அதிகூடிய மரணங்கள் பதிவு : சமூக பொறுப்புடன் செயற்பட்டால் கொரோனாவை தடுக்கலாம் - வைத்தியர் நா. மயூரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 7, 2021

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலேயே அதிகூடிய மரணங்கள் பதிவு : சமூக பொறுப்புடன் செயற்பட்டால் கொரோனாவை தடுக்கலாம் - வைத்தியர் நா. மயூரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளதோடு, மட்டு சுகாதார பிரிவிலேயே அதிகமாக 55 மரணம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட இருவர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் 248 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

அதேவேளை களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 73 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 பேர் உட்பட 206 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகூடியதாக 55 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேரும் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

கடந்த மாதத்தில் 7,959 கொரோனா தொற்று ஊறுதி செய்யப்பட்டதுடன் கடந்த வாரத்தில் 1,414 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டதுடன் நாளாந்தம் 200 க்கும் மேற்பட்ட தொற்றாளர்களும் 5 க்கும் மேற்பட்ட உயிரிழப்பும் இடம்பெறுகின்றதுடன் தொடர்ந்து 2,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் இவர்களில் 1,600 பேர் வீடுகளில் வைத்து பராமரிக்கப்படுகின்றனர்.

மாவட்டத்தில் முதல் தடுப்பூசி 30 வயதுக்கு மேற்பட்ட 95 வீதமான 2,70,000 ஆயிரம் பேருக்கு எற்றப்பட்டதுடன் இரண்டாவது தடுப்பூசி 74 வீதமான 2,19,000 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக 90 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் 20 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் தற்போதுள்ள முடக்க காலத்தில் வெளியே வராமல் சமூக பொறுப்புடன் செயற்பட்டால் கொரோனாவை தடுக்கலாம்.

எனவே மக்கள் முதலில் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக பொறுப்புடன் நடந்து கொண்டால் மாத்திரமே இந்த தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்றார்.

மாவட்டத்தில் முடக்கத்தின்போது எந்தவித பொது நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment