நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 12935 பேர் தொற்றாளர்கள், 469 கொரோனா மரணங்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 19, 2021

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 12935 பேர் தொற்றாளர்கள், 469 கொரோனா மரணங்கள்

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 12935 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதோடு, 469 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தின் கொரோனா தொற்று தொடர்பாக இன்று (19) மாலை வெளியான அறிக்கையின்படி 12,935 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 469 பேர் மரணமடைந்துள்ளனர். 8287 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 19.9.2021 வரையான 24 மணித்தியாலயத்தில் 42 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அம்பகமுவ பகுதியில் 2314 குடும்பங்களும் கொத்மலை பகுதியில் 1365 குடும்பங்களும் ஹங்குரன்கெத்த பகுதியில் 1216 குடும்பங்களும் வலப்பனை பகுதியில் 1403 குடும்பங்களும் நுவரெலியாவில் 1989 குடும்பங்களுமாக மொத்தமாக 8287 குடும்பங்கள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று உறுதியானவர்களில் அதிகமானவர்கள் அம்பகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அம்பகமுவ பகுதியில் 2062 பேரும் பொகவந்தலாவ பகுதியில் 1192 பேரும் ஹங்குரன்கெத்த பகுதியில் 601 பேரும் கொட்டகலை பகுதியில் 930 பேரும் கொத்மலையில் 1034 பேரும் லிந்துலையில் 1124 பேரும் மஸ்கெலியா 798 பேரும் மதுரட்ட பகுதியில் 251 பேரும் நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்டவர்களில் 700 பேரும் புதிய திஸ்பனை பகுதியில் 1026 பேரும் நுவரெலியாவில் 1679 பேரும் இராகலையில் 800 பேரும் வலப்பனை பகுதியில் 738 பேருமாக மொத்தமாக 12935 பேர் பி.சி.ஆர் பரிசோதனையின் மூலமாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்கள் அதிகம் இனம் காணப்பட்ட பிரதேசமாக அம்பகமுவ பிரதேசம் காணப்படுகின்றது. இங்கு 2062 பேர் இனம் காணப்பட்டுள்ளதுடன். இதுவரையில் நுவரெலியா மாவட்டத்தில் 469 பேர் உயிரிழந்துள்ளதுடன். அதில் அதிகமானவர்கள் நுவரெலியா பகுதியிலேயே உயிரிழந்துள்ளனர். 145 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர அம்பகமுவ பகுதியில் 140 பேரும் வலப்பனை பகுதியில் 70 பேரும் கொத்மலையில் 69 பேரும் ஹங்குரன்கெத்த பகுதியில் 45 பேருமாக 469 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் அதாவது இந்த அறிக்கை வெளியான இன்று (19) மாலை 4.00 மணி வரை வலப்பனை பகுதியிலேயே அதிகமான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 17 பேர் இனம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(தலவாக்கலை நிருபர் - பீ. கேதீஸ்)

No comments:

Post a Comment