தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட மற்றும் வெளிநாடு செல்லவிருப்பவர்களுக்கும் செலுத்துங்கள் : PHI மார் சங்கம் கோரிக்கை - News View

Breaking

Tuesday, August 31, 2021

தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட மற்றும் வெளிநாடு செல்லவிருப்பவர்களுக்கும் செலுத்துங்கள் : PHI மார் சங்கம் கோரிக்கை

நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்தி, உடல் நலம் பாதிக்கப்பட்ட மற்றும் வெளிநாடு செல்லவிருப்பவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது. 

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிலையங்களில் தடுப்பூசி வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகிறார்களென்பதை சுட்டிக்காட்டியே சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இருப்பினும் சில வைத்தியசாலைகளில் பிரத்தியேகமாக தடுப்பூசி வழங்குவதற்குரிய வசதிகள் இல்லை என்பதனால் அவர்கள் மீண்டும் தற்காலிக நிலையங்களுக்கு திரும்புவதாகவும் அவர் கூறினார். 

ஆகவே அனைத்து வைத்தியசாலைகளிலும் கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகள் இருக்க வேண்டுமென உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

இதேவேளை வெளிநாடு செல்ல விரும்புவோர் அதற்கு தேவையான ஆவணங்களை இதுவரை பெற்றுக் கொள்ளாதமையின் காரணமாக தடுப்பூசியை பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் உபுல் ரோஹன தெரிவித்தார்.

ஆகவே தற்போதைய தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பாக மீளாய்வு செய்து குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அவர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment