தொற்றாளரும், மரண வீதமும் அதிகரிப்பு : நுவரெலியாவுக்கு தடுப்பூசிகளை விரைவாக தருமாறு புதிய சுகாதார அமைச்சருக்கு இராதா MP கடிதம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 22, 2021

தொற்றாளரும், மரண வீதமும் அதிகரிப்பு : நுவரெலியாவுக்கு தடுப்பூசிகளை விரைவாக தருமாறு புதிய சுகாதார அமைச்சருக்கு இராதா MP கடிதம்

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் மரண வீதமும் அதிகரித்துள்ளது. எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு உடனடியாக நுவரெலியாவுக்கு எஞ்சியுள்ள தடுப்பூசிகளை விரைவாக பெற்றுத் தருவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்லவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

சுகாதார அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய சுகாதார அமைச்சராக கடமையேற்றுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வாழ்த்து தெரிவித்து அவர், தங்களுடைய திறமையும் அனுபவமும் இந்த அமைச்சை சிறப்பாக முன்னெடுக்க முடியுமென்ற நம்பிக்கை இருக்கின்றது.

உங்களுக்கு எங்களுடைய மலையக மக்கள் சார்பாக வாழத்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் என்றும் அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள தகவல்களை நான் நுவரெலியா சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொண்ட வகையில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது தடுப்பூசி 3,54,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் இரண்டாவது தடுப்பூசி 2,00,000 இலட்சம் கிடைத்துள்ளது.

அவற்றில் 30 வீதமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிராந்திய சுகாதார திணைக்களத்தின் தொற்றா நோய் பிரிவின் வைத்தியர் மதுர செனவிரத்ண தெரிவித்திருக்கின்றார்.

எனவே அந்த வகையில் இரண்டாவது தடுப்பூசிக்கு இன்னும் 1,54,000 பேருக்கு வழங்குவதற்கான தேவைப்படுகின்றது. அதே நேரத்தில் முற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் 55,000 பேருக்கு இன்னும் முதலாவது தடுப்பூசி வழங்கப்படவில்லை. அவர்களுக்கும் மிக விரைவாக தடுப்பூசிகளை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு நுவரெலியா மாவட்டத்திற்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு கவனம் செலுத்துவீர்களென எதிர்பாரக்கின்றேன்.

இன்றைய நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையில் தங்களுடைய பொறுப்பானது இந்த நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒரு அமைச்சாகும்.தங்களுக்கு இருக்கின்ற அனுபவத்தின் அடிப்படையில் இந்த அமைச்சை தாங்கள் சிறப்பாக முன்னெடுக்க முடியுமென நான் கருதுகின்றேன்.

அதேநேரம் இந்த அமைச்சை பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன்.எங்களுடைய மலையக மக்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் வீ. இராதாக்கிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா நிருபர்

No comments:

Post a Comment