மாத்தறையில் பெருந்தொகை வெடி பொருட்களை வைத்திருந்த இருவர் கைது - நோக்கத்தை கண்டறிய விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் - News View

Breaking

Thursday, August 26, 2021

மாத்தறையில் பெருந்தொகை வெடி பொருட்களை வைத்திருந்த இருவர் கைது - நோக்கத்தை கண்டறிய விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார்

(எம்.எப்.எம்.பஸீர்)

மாத்தறை பகுதியில், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட இரு வேறு விஷேட சுற்றிவளைப்புக்களில் சுமார் 2000 கிலோவுக்கும் அதிகமான அமோனியம் நைற்ரைட் எனும் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் தென் மாகாண விஷேட நடவடிக்கை பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற விஷேட தகவலுக்கு அமைய, விஷேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவின் உத்தரவில் இந்த சுற்றிவளைப்புக்கள் மாத்தறை மற்றும் கந்தரை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை - மெத்தவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அனுமதிப்பத்திரமின்றி அமோனியம் நைற்ரைட் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 1050 கிலோ அமோனியம் நைட்ரஜனும் 672 ஜெலடின் குச்சிகளும் 10 மீட்டர் நீளமான வெடிக்க வைக்க பயன்படும் நூல் 50 சுருள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படை அறிவித்துள்ளது. இதன்போது மெத்தவத்த பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, 1000 கிலோ அமோனியம் நைற்ரைட்டுடன் மாத்தறை - கெக்குனதுர பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரு சுற்றிவளைப்பு சம்பவங்கள் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment