கையிருப்பிலுள்ள உணவு பொருட்கள் ஒரு மாத காலத்துக்கு கூட போதுமானதாக இல்லை : அரசாங்கத்திடம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் மன்றாட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

கையிருப்பிலுள்ள உணவு பொருட்கள் ஒரு மாத காலத்துக்கு கூட போதுமானதாக இல்லை : அரசாங்கத்திடம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் மன்றாட்டம்

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில், வர்த்தகர்களின் கைவசம் ஒரு மாதத்துக்கும் குறைந்த கையிருப்பே காணப்படுவதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

உணவுகளை இறக்குமதி செய்தவர்களுக்கு போதுமான டொலரினை வங்கிகள் வழங்காமை இதற்கான காரணம் எனவும், அதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலைமையை சமனிலை செய்ய உடன் தலையீடு செய்யுமாறு தனது சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று 27 ஆம் திகதி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும், அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பிலான அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையே சூம் தொழில் நுட்பம் ஊடாக விஷேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.

இதன்போது வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகிய வண்ண அகையோருக்கு பிரச்சினைகளை விலக்கியதாகவும், அவர்கள் விடயத்தை அரசாங்கத்தின் ஏனைய தரப்பினரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிலைமையை சமநிலை செய்ய தலையீடு செய்வர் என நம்புவதாகவும் உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டார்.

பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், ரின் மீன், கொத்தமல்லி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய மாதாந்தம் 100 மில்லியன் அமரிக்க டொலர்கள் செலவாவதாகவும், இறக்குமதியாளர்களுக்கு தமது இறக்குமதிகளை முன்னெடுக்க வங்கிகள் கடன் பத்திரங்களுக்கான டொலரினை வழங்குவதில் எழுந்துள்ள சிக்கல் நிலைமையானது, உரிய நேரத்தில் இறக்குமதிகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்துள்ளதாக உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டார்.

எனவே இது குறித்து அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment