வக்பு சபையின் தீர்மானங்களையே அறிவித்தேன் : ஜனாதிபதி, பிரதமரின் தலையீடு இல்லை என்கிறார் அஷ்ரப் - News View

About Us

About Us

Breaking

Friday, August 6, 2021

வக்பு சபையின் தீர்மானங்களையே அறிவித்தேன் : ஜனாதிபதி, பிரதமரின் தலையீடு இல்லை என்கிறார் அஷ்ரப்

இலங்கை ஒரு ஜன­நா­யக நாடு. அந்த வகையில் அர­சியல் தலை­யீ­டுகள் இல்­லாத திணைக்­க­ளங்­களே இல்லை. அதிலும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் அள­வுக்கு அதி­க­மான அர­சியல் தலை­யீ­டுகள் இருந்­தன. அதனால் இந்த திணைக்­க­ளத்தில் இணைந்து கொள்­வ­தில்லை என்­றி­ருந்தேன். என்­றாலும் இந்த திணைக்­க­ளத்தில் நான் பத­வி­யேற்­ற­தி­லி­ருந்து ஜனா­தி­ப­தி­யி­னதும், பிர­த­ம­ரி­னதும் தலை­யீ­டுகள் இருக்­க­வில்லை என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரி­வித்தார்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்­கள்­ தி­ணைக்­க­ளத்தில் பணிப்­பா­ள­ராகக் கட­மை­யாற்றி இடமாற்றம் ­பெற்ற ஏ.பி.எம்.அஷ்ரப், பதில் பணிப்­பா­ள­ராக புதி­தாக நிய­மனம் பெற்ற எம்.எல்.எம். அன்வர் அலி­யிடம் தனது பொறுப்­பு­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கடந்த திங்­கட்­கி­ழமை கைய­ளித்தார். 

அத­னை­ய­டுத்து அவ­ருக்கு திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்­களால் பிரி­யா­விடை வைப­வ­மொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஏ.பி.எம்.அஷ்ரப் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அமைச்சின் முன்னாள் செய­லா­ள­ருக்கும் தற்­போ­தைய செய­லா­ள­ருக்கும் நன்­றி­களைத் தெரி­விக்­கின்றேன். அவர்கள் எனக்கு பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­னார்கள். அத்­தோடு சகல வழி­க­ளிலும் ஒத்­து­ழைப்பு வழங்­கிய திணைக்­கள ஊழி­யர்­க­ளுக்கும் நன்­றி­களைத் தெரி­விக்­கிறேன்.

ஹஜ் விவ­கா­ரங்­களில் எனது முடி­வுகள் தனி முடி­வாக இருக்­க­வில்லை. ஹஜ் குழு­வுடன் தொடர்­பு­பட்டே முடி­வு­களை மேற்­கொண்டேன். ஹஜ் யாத்­திரை தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­படும் வரை இருந்த ஹஜ் குழு­வுக்கும் அதன் தலை­வ­ருக்கும் நன்­றி­களைத் தெரி­விக்­கின்றேன்.

பள்­ளி­வாசல் விட­யங்­களில் வக்­பு ­ச­பையின் தீர்­மா­னத்­தி­னையே அறி­விப்புச் செய்தேன். வக்­பு­ ச­பையின் தலை­வ­ரது சரி­யான தீர்­மா­னங்­களை நான் வர­வேற்­கிறேன். நன்றி தெரி­விக்­கிறேன்.

மத­ வி­வ­கா­ரங்கள் தொடர்­பான தீர்­மா­னங்­களை அதற்­கென ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த 9 பேர­டங்­கிய குழுவின் ஆலோ­ச­னைப்­ப­டியே மேற்­கொண்டேன். 

கலை, இலக்­கிய மேம்­பாட்­டுக்­காக 11 பேர­டங்­கிய குழு­வொன்று உள்­ளது. இக்­கு­ழுவின் ஆலோ­ச­னை­யின்­படி தற்­போது 53 திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

நீதி­ய­மைச்சர் அலி­ சப்ரி எனது உத்­தி­யோ­க­பூர்வ விட­யங்­களில் தலை­யி­ட­வில்லை. ஆலோ­ச­னை­களே வழங்­கி­யுள்ளார். மேலும் நகீப் மெள­லானா, ஹஸன் மெள­லானா ஆகியோர் எனக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளார்கள் அவர்­க­ளுக்கும் நன்­றிகள்.

நான் பத­வி­யேற்­ற­போது திணைக்­க­ளத்­துக்­கென 11 மாவட்­டங்­க­ளிலே கள உத்­தி­யோ­கத்­தர்கள் இருந்­தார்கள். நான் ஏனைய 14 மாவட்­டங்­க­ளுக்கும் கள உத்­தி­யோ­கத்­தர்­களை நிய­மித்­துள்ளேன். நான் பத­வி­யேற்­ற­போது 90 உத்­தி­யோ­கத்­தர்­களே திணைக்களத்தின் கீழ் பத­வியில் இருந்­தார்கள். தற்­போது மொத்தம் 120 பேர் பத­வியில் இருக்­கி­றார்கள். 

எனக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், வக்பு சபை மற்றும் சிவில் சமூக அமைப்­பு­க­ளுக்கும் எனது நன்­றிகள். எனது பத­விக் ­கா­லத்தில் பிறை தொடர்பில் பிரச்­சி­னைகள் எழ­வில்லை.பிறைக்­ கு­ழு­வுக்கும் எனது நன்­றிகள்.

மெள­ல­வி­மார்­களின் சம்­பளம் மற்றும் மேம்­பாட்டு வளர்ச்­சித்­திட்டம் தொடர்பில் அறிக்­கை­யொன்­றினை வக்பு சபைக்கு சமர்ப்­பித்­துள்ளேன். புதி­தாக பதில் பணிப்­பா­ள­ராகப் பத­வி­யேற்­றுள்ள அன்­வர்­அலி அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மென வேண்­டிக்­கொள்­கிறேன். எனது பத­விக் ­கா­லத்தில் 100 க்கும் மேற்­பட்ட புதிய திட்­டங்­களை வகுத்­துள்ளேன் என்றார்.

இதே­வேளை, ‘முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்றி இட­மாற்றம் பெற்றுச் செல்லும் ஏ.பி.எம்.அஷ்ரப் சமூ­கத்தின் நன்­மைக்­காக பல்­வேறு திட்­டங்­களை வகுத்து அமுல்­ப­டுத்­தி­யுள்ளார். 

அவர் அமுல்­ப­டுத்­தி­யுள்ள திட்­டங்கள் மற்றும் அமுல்­ப­டுத்த வேண்­டி­யுள்ள அவ­ரது திட்­டங்கள் அனைத்தும் எவ்­வி­த­த­டை­க­ளு­மின்றி முன்­னெ­டுக்­கப்­படும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதில் பணிப்­பா­ள­ராக கட­மை­யேற்­றி­ருக்கும் எம்.எல்.எம். அன்வர் அலி தெரி­வித்தார்.

கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­மாற்றம் பெற்றுச் சென்ற திணைக் களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரபுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் திணைக்களத்தின் மூலம் பல்வேறு முன்னேற்றகரமான திட்டங்களை அமுல்படுத்திய முன்னாள் பணிப்பாளர் பாராட்டுக்குரியவர். அவரது பிரிவு எம்மை கவலையில் ஆழ்த்தியுள்ளது எனக்கு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டார்.

Vidivelli

No comments:

Post a Comment