மூன்று வயது சிறுவனின் உயிரைப் பறித்த மின்­வி­சி­றி : காங்­கே­ய­னோ­டையில் பரி­தாப சம்­ப­வம் : பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் எந்நேரமும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, August 6, 2021

மூன்று வயது சிறுவனின் உயிரைப் பறித்த மின்­வி­சி­றி : காங்­கே­ய­னோ­டையில் பரி­தாப சம்­ப­வம் : பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் எந்நேரமும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் ஆரை­யம்­பதி பிர­தேச செய­லாளர் பிரிவில் காங்­கே­ய­னோடை பிர­தே­சத்தில் கடந்த சனிக்­கி­ழமை (31) மாலை சிறுவன் ஒருவன் மின்­சாரம் தாக்கி உயி­ரி­ழந்த சம்­பவம் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

காங்­கே­ய­னோடை பத்ர் பள்­ளி­வாசல் வீதியில் உள்ள சிறு­வனின் வீட்­டி­லேயே இச் சம்­பவம் இடம் பெற்­றுள்­ளது.

முகமட் ரிபாஸ் முகம்மட் ரிழ்பான் எனும் இச் சிறு­வ­னுக்கு இன்னும் மூன்று வயது பூர்த்­தி­யா­க­வில்லை.

சம்­பவ தின­மான சனிக்­கி­ழமை மாலை சிறு­வனின் தாய் குளிப்­ப­தற்­காக சென்­றுள்ளார். குளித்து விட்டு வந்த போது சிறுவன் வீழ்ந்து கிடப்­ப­தையும் அருகில் மேசை மின்­வி­சி­றியும் (Table Fan) விழுந்து கிடப்­ப­தையும் சிறு­வனின் ஒரு கை மேசை மின்­வி­சிறி பக்­க­மாக சாய்ந்து கிடந்த­தையும் கண்டு கதறி அழு­துள்ளார்.

இத­னை­ய­டுத்து குடும்­பத்­தினர் மற்றும் அய­ல­வர்­களின் உத­வி­யுடன் சிறு­வனை முச்­சக்­கர வண்­டியில் ஆரை­யம்­பதி மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றுள்­ளனர். ஆனால் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்லும் போது அல்­லது அதற்கு முன்­னரே சிறுவன் மர­ணித்­தி­ருக்க வேண்டும் என்று கூறப்­ப­டு­கின்­றது.

தாய் குளிப்­ப­தற்­காகச் சென்ற போது சிறுவன் வீட்­டி­லி­ருந்த மேசை மின் விசி­றியில் கையை வைத்­துள்ளார். அதனால் மின்­சாரம் தாக்­கப்­பட்டு கீழே விழுந்த சிறுவன் உயி­ரி­ழந்­தி­ருக்க வேண்டும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அந்த மேசை மின் விசி­றியின் பின் பக்­கத்­திற்கு மூடி­யில்லை. அதில் கையை வைத்தால் மின்­சாரம் தாக்க கூடிய வாய்ப்­புக்கள் அதி­க­மாக காணப்­பட்­டன.

இதில் சிறுவன் கையை வைத்த போது மின்­சாரம் தாக்கி வீழ்ந்து உயி­ழிந்­துள்­ள­தா­கவே விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கி­றது.

இச் சம்­பவம் தொடர்­பாக காத்­தான்­குடி பொலி­சா­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து காத்­தான்­குடி பொலிசார் ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.
ஆரை­யம்­பதி மாவட்ட வைத்­தி­ய­சா­லை­யி­ருந்து சிறு­வனின் ஜனாஸா மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு அங்கு சட்ட வைத்­திய அதி­கா­ரி­யினால் பிரேத பரி­சோ­தனை மேற்கொள்­ளப்­பட்டு திங்­கட்­கி­ழமை பிற்­பகல் ஜனாஸா உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

மின்­சாரம் தாக்­கி­ய­திலே சிறுவன் உயி­ரி­ழந்­த­தாக சட்ட வைத்­திய அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக உற­வினர்கள் கூறு­கின்­றனர்.

சிறு­வனின் ஜனாசா காங்­கே­ய­னோ­டைக்கு கொண்டு வரப்­பட்டு காங்­கே­ய­னோடை பத்ர் பள்­ளி­வா­யலில் தொழுகை நடாத்­தப்­பட்டு காங்­கே­ய­னோடை மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

இவர் இப் பெற்­றோரின் ஒரே ஒரு பிள்­ளை­யாவார். எப்­போதும் சுறு­சு­றுப்­பாக இருக்கும் இச் சிறு­வனின் மரணம் குடும்­பத்­தி­ன­ரையும் அய­ல­வர்­க­ளையும் மிகுந்த கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது.

வறு­மை­யான குடும்ப பின்­ன­ணியைக் கொண்ட இச் சிறு­வ­னுக்கு 2 வயதில் ஏற்­பட்ட வலிப்பு நோய் கார­ண­மாக 7 வயது வரைக்கும் சிறு­வனை பாது­காப்­பாக வைத்துக் கொள்ள வேண்டும் என வைத்­தி­யர்கள் அறி­வு­ரையும் ஆலோ­ச­னையும் கூறி­ய­தா­கவும் அறி­ய­மு­டி­கி­றது. 

அதே போன்று இச் சிறுவன் சில மாதங்­க­ளுக்கு முன்பு விபத்­தொன்­றி­னாலும் உபா­தை­யா­கி­யு­முள்ளார்.

பிள்­ளைகள் தொடர்பில் பெற்றோர் எந்­நே­ரமும் மிகுந்த கவ­ன­மாக இருக்க வேண்டும் என்­ப­தையே இச் சம்­பவம் உணர்த்­து­கி­றது. அத்­து­டன் மின்­சா­ரம் தாக்கக் கூடி­ய­வாறு மின்­சா­தனப் பொருட்­களை வீடு­களில் வைத்­தி­ருப்­பதும் தவிர்க்­கப்­பட வேண்­டி­ய­தாகும். 

ஏது­ம­றி­யாத சிறு­வர்­க­ளுக்கு அதன் மூலம் உயி­ரா­பத்­துகள் கூட ஏற்­ப­டலாம் என்­பதே இந்தச் சம்­ப­வத்தின் மூலம் நாம் கற்க வேண்­டிய பாட­மாகும்.

No comments:

Post a Comment