அஹ்னாப் ஜஸீமை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளை அனுமதிக்குக : உயர் நீதிமன்றம் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Friday, August 6, 2021

அஹ்னாப் ஜஸீமை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளை அனுமதிக்குக : உயர் நீதிமன்றம் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உத்தரவு

“நவ­ரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்­க­ம­றியல் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவரை சந்­திக்க அவ­ரது சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு உட­ன­டி­யாக அனு­ம­திக்­கு­மாறு உயர் நீதி­மன்றம் நேற்று முன்தினம் உத்­த­ர­விட்­டது.

சட்­டத்­த­ர­ணிகள் - சேவை பெறு­நர்­க­ளி­டை­யே­யான சிறப்­பு­ரிமை மற்றும் இர­க­சிய தன்­மை தொடர்­பி­லான உரி­மை­களை பாது­காக்கும் வகையில் இந்த சந்­திப்பு அனு­ம­தியை உடன் அளிக்­கு­மாறு உயர் நீதி­மன்றம் சிறைச்­சா­லைகள் திணைக்­க­ளத்­துக்கு இந்த உத்­தரவை பிறப்­பித்­தது.

அஹ்­னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோ­த­மா­னது எனக் கூறி உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள எஸ்.சி.எப்.ஆர்.ஏ 114/ 21 எனும் அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று முன்தினம் பரி­சீ­ல­னைக்கு வந்த போது, நீதி­மன்றம் இதனை அறி­வித்­தது.

இதன்­போது, மனு­தா­ர­ரான அஹ்னாப் ஜஸீம் சார்பில் மன்றில் சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர மற்றும் லக்ஷ்­மனன் ஜய­குமார் ஆகி­யோ­ருடன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கண்க ஈஸ்­வரன் ஆஜ­ரானார்.

கடந்த மே மாதம் முதல், அஹ்னாப் ஜஸீம் எந்­த­வொரு நீதி­மன்றம் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­ப­ட­வில்லை எனவும், அவ­ரது அடிப்­படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆலோ­ச­னையை பெற்­றுக்­கொள்ளக் கூட அவரை சந்­திக்க சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை என உயர் நீதி­மன்றில் வாதங்­களை முன் வைத்து சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது மனுவின் பிர­தி­வா­திகள் சார்பில் ஆஜ­ரான மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் நரின் புள்ளே, மனு­தாரர் தற்­போது நீதி­மன்ற காவலின் கீழ் உள்­ள­தா­கவும், தடுப்புக் காவல் உத்­த­ரவு கால­வ­தி­யான நிலையில் அவர் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு இவ்­வாறு நீதி­மன்ற காவலில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். 

அத்­துடன் இந்த விவ­கா­ரத்தில் சட்டமா அதிபர் ஏலவே மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஆட்­சே­ப­னை­களை முன் வைத்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலை­யி­லேயே, அஹ்னாப் ஜஸீமை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதியளிக்குமாறு உயர் நீதிமன்றம் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உத்தரவிட்டதுடன், மனு மீதான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

Vidivelli

No comments:

Post a Comment