சிறந்த பிரதிபலனைப் பெறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்கிறார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 20, 2021

சிறந்த பிரதிபலனைப் பெறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்கிறார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

எம்.மனோசித்ரா

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் பிரதிபலனை எதிர்வரும் இரு வாரங்களின் பின்னரே பெற முடியும். எனவே அடுத்த இரு வாரங்களின் பின்னர் சிறந்த பிரதிபலனைப் பெறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் உடனடியாக அதாவது ஓரிரு தினங்களில் நாட்டில் தற்போதுள்ள நிலைமை சீராகும் என்று கருத முடியாது. இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் பிரதிபலனை எதிர்வரும் இரு வாரங்களின் பின்னரே பெற முடியும்.

எவ்வாறிருப்பினும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலுள்ள போதிலும், தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படும். பிரதேச ரீதியில் எவ்வாறு அவற்றை முன்னெடுப்பது என்பது குறித்து உரிய அதிகாரிகள் தீர்மானிப்பர் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment