வாழைச்சேனை கறுவாக்கேணியில் அமைந்துள்ள வனபரிபாலனத் திணைக்களத்தினால் நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வளாகத்தில் நடுவதற்காக வுளு Blue (தாண்டிக்காய்), காயா, திருக்கொன்றை, வேம்பு போன்ற பயனுள்ள மரக்கன்றுகள் வழங்கப்பட்டு கடந்த 29.07.2021 ம் திகதி அம்மரக் கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்வில் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரியான Dr. M. றிக்காஷ் தலைமையில் இடம் பெற்றது.
குறிப்பிட்ட இந்நிகழ்வில் மரக்கன்றுகளை வழங்கிய வன விரிவாக்கல் பரிபாளன வாழைச்சேனை காரியாலய உத்தியோகத்தர் Mr. SM. சபீக் கலந்து சிறப்பித்தார்.
வழங்கப்பட்ட மரங்களை வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் வனபரிபாளன அதிகாரி சகிதம் ஒன்றினைந்து நடுகையில் ஈடுபட்டனர்.
அத்தோடு மரக்கன்றுகளை வழங்கிய வனபரிபாலனத் திணைக்களத்திறக்கு வைத்திய பொறுப்பதிகாரி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
No comments:
Post a Comment