இரண்டு ஆண்டுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவசர நிலை நீக்கப்படும் - மியன்மார் ராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Monday, August 2, 2021

இரண்டு ஆண்டுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவசர நிலை நீக்கப்படும் - மியன்மார் ராணுவத் தளபதி

மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி  ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. 

மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளது. தேர்தல் முறைகேடு காரணமாக ஆட்சியை கவிழ்த்ததாக ராணுவம் கூறுகிறது.

ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

போராட்டத்தை ராணுவம் கொடூரமாக அடக்கி வருகிறது. இதில், 900 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் போராட்டம் நீடிக்கிறது.

இரு ஒருபுறமிருக்க கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. பொருளாதாரம் 18 சதவீதம் வரை சரியும் என உலக வங்கி கணித்துள்ளது.

இந்நிலையில், ராணுவ ஆட்சியின் பதவிக் காலம் மேலும் நீட்டிக்கப்படுவதாகவும், ஆகஸ்ட் 2023 க்குள் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவசர நிலை நீக்கப்படும் எனவும் ராணுவத் தளபதி உறுதி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment