அரசாங்கம் உள்ளக முரண்பாடுகளை புறந்தள்ளி, கொவிட் பரவலை கட்டுப்படுத்த முக்கியத்துவமளிக்க வேண்டும் - கபீர் ஹாசிம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

அரசாங்கம் உள்ளக முரண்பாடுகளை புறந்தள்ளி, கொவிட் பரவலை கட்டுப்படுத்த முக்கியத்துவமளிக்க வேண்டும் - கபீர் ஹாசிம்

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்று பரவலால் நாட்டில் பாரதூரமானதொரு தேசிய அனர்த்தம் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதன் உள்ளக முரண்பாடுகளை புறந்தள்ளி, கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் மீது என்ன நம்பிக்கை இருக்கிறது? கொவிட் நிதியமொன்றை ஸ்தாபித்தனர். சீனியின் மூலம் கோடிக் கணக்கில் இலாபம் ஈட்டினார்கள். இதேபோன்று மேலும் பல ஒப்பந்தங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றனர்.

ஆனால் மக்களுக்கு கிடைக்கும் சலுகை எதனையும் நாம் அவதானிக்கவில்லை. தடுப்பூசியைக் கூட மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு கூட முடியாமலுள்ளது. பி.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. பி.சி.ஆர், அன்டிஜன், ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் என்பவற்றின் மூலம் வருமான மீட்டுகின்றனர்.

இவ்வாறிருக்கையில் எமது ஊதியத்தை அவர்களுக்கு வழங்குவதற்கு நம்பிக்கை ஏற்படுமா? எனவேதான் அரசாங்கம் கொவிட் நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னரே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் எதிர்க்கட்சி சகல வைத்தியசாலைகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. நோயாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உதவியளிக்கப்பட்டுள்ளன. எமக்கு எமது தலைவர் மீது நம்பிக்கை இருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment