'தலிபான்' என்ற சொல் நீக்கம் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா போட்ட யூ-டர்ன் - News View

About Us

About Us

Breaking

Monday, August 30, 2021

'தலிபான்' என்ற சொல் நீக்கம் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா போட்ட யூ-டர்ன்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்த அமைப்பு குறித்த உலகின் கருத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்பதை காலம்தான் சொல்லும். ஆனால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (யுஎன்எஸ்சி) அறிக்கைக்குப் பிறகு இப்போது இது குறித்து தீவிரம் காட்டப்படுவதாக நம்பப்படுகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியின்படி பாதுகாப்பு கவுன்சில்,தனது முந்தைய அறிக்கையில் மாற்றங்களைச் செய்துள்ளது. ஒரு பத்தியில் பயன்படுத்தப்பட்ட 'தலிபான்' என்ற வார்த்தையை அது நீக்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி சையது அக்பருதீன், யுஎன்எஸ்சியின் இரண்டு அறிக்கைகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளார். கூடவே 'T' (தலிபான்)என்ற வார்த்தை காணாமல் போனது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவின் முடிவு, 1

ஆகஸ்ட் 16 அறிக்கை
தலிபான்கள் காபூலை கைப்பற்றிய ஒரு நாளுக்குப் பிறகு அதாவது ஆகஸ்ட் 16 அன்று,, ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, யுஎன்எஸ்சி சார்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

"பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் எந்தப் பகுதியையும் எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ பயன்படுத்தக் கூடாது என்பதையும், தலிபான்கள் அல்லது ஆஃப்கன் குழுக்கள் அல்லது எந்த தனி நபரோ, வேறு எந்த நாட்டிலும் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்,"என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் மாதத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இந்தியாவின் தலைமையில் உள்ளது என்பதும் இந்த அறிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சமூகத்தில் தலிபான்கள் இனி நீண்ட காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்ற உணர்வு இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த அறிக்கையில் 'தலிபான்' காணவில்லை
காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 170 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்த மறுநாள் அதாவது ஆகஸ்ட் 27 அன்று, ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் திருமூர்த்தி மீண்டும் கவுன்சில் சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இந்தத் தாக்குதலை கண்டனம் செய்தார்.

இந்த அறிக்கையில் ஆகஸ்ட் 16 அறிக்கையின் ஒரு பத்தியும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அதில் 'தலிபான்' என்ற சொல் இடம்பெறவில்லை.

"பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். ஆப்கானிஸ்தானின் எந்தப் பகுதியையும் எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ பயன்படுத்தக் கூடாது என்பதையும், ஆப்கன் குழுக்கள் அல்லது எந்த தனிநபரோ, வேறு எந்த நாட்டிலும் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்," என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தலிபான் என்ற வார்த்தை நீக்கப்பட்டிருப்பது, இந்தியா உட்பட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் தலிபான்களை ஒரு 'அரசு அமைப்பாக' பார்க்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

சமூக ஊடகங்களில் கருத்துகள்
இந்த விஷயம் தெரிய வந்த பிறகு, முன்னாள் தூதாண்மை அதிகாரிகளும் பிரபல பத்திரிகையாளர்களும், சமூக ஊடகங்களில் தங்கள் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் முன்னாள் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன், "தூதாண்மையில், பதினைந்து நாட்கள் என்பது நீண்ட காலம் என்று கருதப்படுகிறது. 'டி' என்ற சொல் காணவில்லை. ஆகஸ்ட் 16 மற்றும் 27 ஆகிய திகதிகளில் வெளியான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்,"என்கிறார்.

பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர் இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையை மறு ட்வீட் செய்தார். "ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் மேற்பார்வையின் கீழ் பயங்கரவாதத்தின் சூழலில் தலிபான் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இந்தியா தலைமையிலான 1988 ஆம் ஆண்டின் தலிபான் தடைகள் குழுவில் என்ன நடக்கப்போகிறது என்பதும் மேலும் முக்கியமாகிறது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவின் முடிவு, 2

அதே நேரத்தில், முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் கன்வல் சிபலும் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

"யுஎன்எஸ்சி அறிக்கையை வெளிப்படையாக வலியுறுத்திய அமெரிக்கா, விமான நிலைய தாக்குதல் பொறுப்பிலிருந்து தலிபான்களை விடுவித்து, ஐ.எஸ் - கே மீது குற்றம் சாட்டியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. அமெரிக்க பாதுகாப்புப் படைகள் வெளியேறும் நடவடிக்கையில் 'டி' பாதுகாப்பு அளிப்பதாக மத்திய கமாண்டின் தலைவர் கூறியுள்ளார். அடிபணிய வைத்த 'டி' யை அமெரிக்கா பாராட்டுவது தார்மீக ரீதியில் புரியாத புதிராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Twitter பதிவின் முடிவு, 3

அறிக்கையில் கையெழுத்திட எடுக்கப்பட்ட முடிவு "மாறி வரும் யதார்த்தத்தை" மனதில் வைத்து எடுக்கப்பட்டது என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் தெரிவிக்கிறது.

தலிபான்கள் நாட்டை ஆக்கிரமித்த பிறகு, வெளிநாட்டினரைத் தவிர, அந்த நாட்டின் பல குடிமக்களும் நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆகஸ்ட் 31 அன்று அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு கண்டிப்பாக வெளியேறியே ஆக வேண்டும்.

ஆகஸ்ட் 15 முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் முதல் அறிக்கை வெளியான ஒரு நாள் கழித்து அதாவது ஆகஸ்ட் 17 அன்று, காபூலில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டு அதன் ஊழியர்கள் தாயகம் திரும்பினர்.

No comments:

Post a Comment