புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நிஹால் தல்துவ நியமனம் - News View

Breaking

Monday, August 16, 2021

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நிஹால் தல்துவ நியமனம்

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP), சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் C.T. விக்ரமரத்னவினால் புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2011 முதல் 2021 வரை கடந்த 10 வருடங்களாக 4 தடவைகள் குறித்த பதவியிலிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹணவின் இடத்திற்கே அவர் இன்று (16) முதல் அமுலாகும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிஹால் தல்துவ இதற்கு முன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

தனது ஊடகத்துறை தொடர்பான பணியில் வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அஜித் ரோஹண நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad