அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இலங்கை : பொருளாதாரமா ? உயிர்களா? : தடுப்பூசி வழங்குவதை துரிதப்படுத்துவது போதுமானதா? - News View

About Us

About Us

Breaking

Sunday, August 8, 2021

அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இலங்கை : பொருளாதாரமா ? உயிர்களா? : தடுப்பூசி வழங்குவதை துரிதப்படுத்துவது போதுமானதா?

(பி.பி.சி - சிங்கள சேவை)

இனியேனும் முறையாக செயற்படாது வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முற்படாவிட்டால், நாளொன்றில் சுமார் 200 தொடக்கம் 300 வரையிலானோர் உயிரிழக்கும் நிலை ஏற்படும். அடுத்து வரும் இரு வாரங்களில் கொவிட் தொற்றில் நாளொன்றில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 150 ஆக அமையும் என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

90 வீதம் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக்கூடும் என்பதை தரவுகள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார். 

அத்தோடு, ஏற்படக்கூடிய அந்த மரண எண்ணிக்கையை தடுக்க நாம் இன்னும் தாமதமாகக்கூடாதென அவர் மேலும் தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 200 - 300 மரணங்கள்?
துரித மற்றும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டாலும், ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆகும்போது, கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 80 தொடக்கம் 90 வரையில் அமையும் என ஆகஸ்ட் முதலாம் திகதியே பேராசிரியர் சுனெத் அகம்பொடி எச்சரித்திருந்தார்.

எனவே மரணங்களை தடுப்பதற்கு உரிய பொறிமுறை ஒன்று அவசரமாக உருவாக்கப்பட வேண்டும். தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதித்தல், வீடுகளில் தங்க வைத்து சிகிச்சை அளித்தல் மற்றும் அவசர சேவை உள்ளடங்களாக சிறப்பு பொறிமுறையொன்றின் தேவை உள்ளது.

மறுபுறம் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறியது போன்று, இந்தியாவில் ஏற்பட்டது போன்று ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டால் தொற்றாளர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படலாம். எனவே தொற்று பரவுவதை உடன் தடுக்கப்பட வேண்டும்.

பொருளாதாரமா ? உயிர்களா?
பொருளாதார நெருக்கடிகளை அவதானிக்கும் போது நெருக்கடிகள் காணப்பட்டாலும் கொவிட் தொற்றால் ஏற்படக்கூடிய மரணங்களை தடுப்பது கடினமாகும் என பேராசிரியர் சுனெத் அகம்பெடி பி.பி.சி சேவைக்கு சுட்டிக்காட்டினார். 

உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதா ? அல்லது தற்போதே செயற்படுவதா என்பது இங்கு முக்கியமாகின்றது.

நாட்டை இன்றிலிருந்து இரு வாரம் முடக்கினாலும், இன்னும் இரு வாரம் கடந்து முடக்கினாலும் ஏற்படக்கூடிய விளைவுகள் ஒன்றுதான். ஆனால் உயிரிழப்புக்கள் அவ்வாறு அல்ல என குறிப்பிட்ட பேராசிரியர் சுனெத் அகம்பெடி, சில கேள்விகளுக்கு நேரடியாக பதில்களை வழங்கினார்.

இலங்கையின் இன்றைய நிலை ?
கொவிட் தொற்று இலங்கையில் ஆரம்பமான காலத்தின் மிக ஆபத்தான காலகட்டத்தில் நாம் இன்று உள்ளோம். இந்நிலை மேலும் பயங்கரமானதாக அமையும். டெல்டா தொற்று ஏற்பட்ட பின்னரே இந்த நிலைமை இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

ஆபத்தான நிலைமை ஏற்பட காரணம் என்ன ?
இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்ட நிலைமைகளில் நாம் கற்றுக் கொள்ள வில்லை. சுகாதார துறையின் வீழச்சியை அண்மித்த நிலையிலேயே இலங்கை உள்ளது. தொற்று நோய் ஏற்பட்டு கட்டுப்பாட்டை மீறி பரவும் போது ஏற்படும் உயிராபத்துகள் அதிகமாகும்.

தற்போது செய்ய வேண்டியது என்ன ?
எம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்தாலும் தற்போதைய நிலைமையில் மரணங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். கட்டுப்படுத்த முடியாத நிலையில், தொற்று தீவிரமடையும். தடுப்பூசியின் ஊடாக தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது ஒரு மாயையாகும்.

பொதுவாக தடுப்பூசியின் ஊடாக மரணங்களை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தாலும் தொற்றை கட்டுப்படுத்த முடியாது. இரு கட்ட தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்கள் மூலமும் கொவிட் தொற்று பரவுகின்றது.

15 வீதமானவர்களுக்கு இரு கட்ட தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தற்போது பரவும் கொவிட் தொற்றை அடுத்த இரு மாதத்திற்கு கட்டுப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லை.

தடுப்பூசி வழங்குவதை துரிதப்படுத்துவது போதுமானதா?
நாட்டில் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் தடுப்பூசி வழங்குதல் விஞ்ஞான ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றதா ? என்ற சந்தேகம் உள்ளது. எவ்வாறாயினும் மரணங்களை தடுக்க வேண்டுமாயின், அந்த அவதான நிலை யாருக்கு உள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.

வயோதிபர்கள் மற்றும் வேறு நோய்கள் உள்ளவர்களுக்கே அச்சுறுத்தல்கள் அதிகமாக உள்ளன. சைனோபாம் முதலாவது தடுப்பூசி வழங்கியதற்காக எவ்வித பாதுகாப்பும் கிடைக்கப் போவதில்லை. இரண்டாவது சைனோபாம் தடுப்பூசியை பெற்று இரு வாரங்கள் கடந்த பின்னர் ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும்.

அஸ்ட்ரா செனிகா அல்லது இந்தியாவின் கொவிட்சீல் முதல் கட்ட தடுப்பூசிகளிலேயே பாதுகாப்பு கிடைக்கின்றது. அதே போன்றுதான் பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளும் முதல் கட்டத்திலேயே பாதுகாப்பை வழங்க கூடியது. 

எனவே அவதானம் மிக்கவர்களுக்கு அஸ்ட்ரா செனிகா, கொவிட்சீல், பைசர் மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனையவர்களுக்கு தேவைகளுக்கு ஏற்ப சைனோபாம் தடுப்பூசியை வழங்கலாம். இதனூடாக ஏற்பட கூடிய மரணங்களை ஓரளவு தடுக்கலாம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment