பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக்கிற்கு கொரோனா - News View

Breaking

Thursday, August 26, 2021

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக்கிற்கு கொரோனா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் கொவிட -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின்போதே மிஸ்பா-உல்-ஹக் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை முடித்துவிட்டு பாகிஸ்தான் அணியின் ஏனைய வீரர்கள், உறுப்பினர்களும் லாகூருக்கு பறந்தாலும் அடுத்த 10 நாட்கள் மிஸ்பா-உல்-ஹக் ஜமைக்காவில் தனிமைப்படுத்தலில் இருப்பார்.

"கொவிட்-19 அறிகுறிகளை வெளிக்காட்டாத மிஸ்பா இப்போது 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார், அதைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தானுக்கு புறப்படுவார்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புறப்படுவதற்கு முந்தைய இரண்டு பி.சி.ஆர். சோதனைகளில் தோல்வியடைந்த ஒரே பாகிஸ்தான் அணி உறுப்பினர் மிஸ்பா மட்டுமே. மற்ற அனைத்து உறுப்பினர்களும் புதன்கிழமை பிற்பகுதியில் அட்டவணைப்படி ஜமைக்காவை விட்டு வெளியேறுவார்கள்.

செவ்வாய்க்கிழமை முடிவடைந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பாகிஸ்தான் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றது. முந்தைய 4 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad