அமைச்சர் உதய கம்மன்பில சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
வலு சக்தி அமைச்சு அலுவலகத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகளுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த முடிவை தான் எடுத்துள்ளதாக, தனது பேஸ்புக் மற்றும் ட்விற்றர் கணக்கில் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு மேற்கொண்ட Rapid Antigen சோதனையில் தனக்கு வைரஸ் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், தான் தனிமைப்படுத்தலுக்கு உட்பட முடிவு செய்துள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடர்ந்து தமது அமைச்சை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை மூடுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொற்றைக் கொண்டுள்ள அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதோடு, அனைவரையும் அவதானமாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment