பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் தடுப்பூசி பெறாதவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, August 2, 2021

பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் தடுப்பூசி பெறாதவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் ஆய்வை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனூடாக அனைத்து வீடுகளுக்கும் சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் அதன்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் தொடர்பிலும் தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏற்றப்பட்ட தடுப்பூசி மற்றும் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டதா? தடுப்பூசி பெற்றுக் கொள்ளப்படவில்லையெனின் அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனரா என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரில் 95 வீதமானோர், தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்களென சுகாதார தரப்பினால் எச்சரிக்கப்பட்டுள்ளமையை கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment