எக்ஸ்-பிரஸ் கப்பல் தீ விபத்து : குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ள சட்ட மா அதிபர் - News View

Breaking

Friday, August 20, 2021

எக்ஸ்-பிரஸ் கப்பல் தீ விபத்து : குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ள சட்ட மா அதிபர்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பான விசாரணையை விரைவாக முடிக்க தீர்மானித்துள்ளதாக கூறிய சட்டமா அதிபர் திணைக்களம், குற்றவாளிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளது.

குறித்த வழக்கு, நேற்று கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம, நீதிமன்றத்தில் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.

அத்துடன் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட விசேட குழு, எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து சான்றுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதங்களை ஆராய்ந்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பான விசாரணையை உடனடியாக முடிக்க தீர்மானித்துள்ளதுடன், குற்றவாளிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment