கொழும்பு 1-15 வரை வசிப்பவர்களுக்கு டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்களை பெற விரும்புவோர் பின்வருபவற்றை epidunitcmc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
உங்கள் தடுப்பூசி அட்டையின் இருபுறம்
தே.அ. இலக்கம் / கடவுச்சீட்டின் இருபுறம்
தொடர்பு கொள்ளும் இலக்கம்
சான்றிதழ் தயாரானவுடன் அது பெறுநருக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
இதற்கிடையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு கோரிக்கையின் பேரில் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி அட்டை, கடவுச்சீட் மற்றும் தேவையான பிற ஆவணங்களை தனி நபர் சமர்ப்பித்தவுடன் சான்றிதழை அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமானையினூடாக வழங்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும், விசேட வைத்திய நிபுணருமான ஹேமாந்த ஹேரத் முன்னதாக கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment