உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் மனைவி, ஒரே மகன் கொரோனாவுக்கு பலி - News View

Breaking

Tuesday, August 31, 2021

உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் மனைவி, ஒரே மகன் கொரோனாவுக்கு பலி

(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ்மா அதிபர் பணியகத்தில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் மனைவி, ஒரே மகன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சரும் கொவிட் 19 தொற்று காரணமாக குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

உதவி பொலிஸ் அத்தியட்சரின் மகன் சட்டத்துறை மாணவன் என்பதுடன் அவர் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில், கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலை கொவிட் சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதற்கு முன்பதாகவே கடந்த வாரம், குறித்த உதவி பொலிஸ் அத்தியட்சரின் மனைவி, கொவிட் தொற்று தொடர்பில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment