(எம்.எப்.எம்.பஸீர்)
சந்தையில் செயற்கையாக தட்டுப்பாட்டினை தோற்று வித்து, விலையை அதிகரிக்கும் நோக்கில் பதுக்கப்பட்டதாக நம்பப்படும் 206 கோடி ரூபா பெறுமதியான 10255 மெற்றிக் தொன் சீனி, இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 96 மணி நேரத்தில் ஐந்து பதிவு செய்யப்படாத களஞ்சியங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக நீதிமன்றங்கள் ஊடாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க, நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சீல் வைக்கப்பட்டுள்ள 5 களஞ்சியங்களில், வத்தளை பொலிஸ் பிரிவில் மாபோல மற்றும் கெரவலப்பிட்டிய பகுதிகளில் கண்டறியப்பட்ட இரு களஞ்சியங்களும், களனி, சீதுவை மற்றும் கிரிபத்கொடை ஆகிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தலா ஒவ்வொரு களஞ்சியங்களும் உள்ளடங்குவதாகவும் அவை அனைத்தும் பதிவு செய்யப்படாத களஞ்சியங்கள் எனவும் நுகர்வோர் பதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment