பாணி அருந்துவதாலும், சட்டிகளை ஆற்றில் எறிவதாலும் கொவிட் வைரஸ் தாக்கத்தை வெற்றி கொள்ள முடியாது விஞ்ஞான முறைமை ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும் - அமைச்சர் டலஸ் - News View

Breaking

Sunday, August 22, 2021

பாணி அருந்துவதாலும், சட்டிகளை ஆற்றில் எறிவதாலும் கொவிட் வைரஸ் தாக்கத்தை வெற்றி கொள்ள முடியாது விஞ்ஞான முறைமை ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும் - அமைச்சர் டலஸ்

இராஜதுரை ஹஷான்

பாணி அருந்துவதாலும், சட்டிகளை ஆற்றில் எறிவதாலும் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை வெற்றி கொள்ள முடியாது. விஞ்ஞான முறைமை ஊடாக மாத்திரமே இப்பிரச்சினைக்க தீர்வு காண முடியும். ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்குள் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கம் பெரும் சவாலாக உள்ளது. பாணி அருந்தவதாலும், முட்டிகளை ஆற்றில் எறியும் மூட நம்பிக்கையாலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. விஞ்ஞான முறைமை ஊடாக மாத்திரமே தீர்வு பெற முடியும்.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடு இலங்கை என்ற நிலைக்கு செல்வது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad