அவுஸ்திரேலியாவில் ஊரடங்கு எதிராக ஆர்ப்பாட்டம் : பெப்பர் ஸ்பிறே தெளித்து கட்டுப்படுத்திய பொலிஸார் : கட்டுப்பாடுகளை மீறியதால் அபராதம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 22, 2021

அவுஸ்திரேலியாவில் ஊரடங்கு எதிராக ஆர்ப்பாட்டம் : பெப்பர் ஸ்பிறே தெளித்து கட்டுப்படுத்திய பொலிஸார் : கட்டுப்பாடுகளை மீறியதால் அபராதம்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊரடங்கு சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களில் 4,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 218 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 6 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக விக்டோரியா நகர பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த ஆர்ப்பாட்டம் மெல்போர்னின் ஸ்பிரிங் வீதியில் அமைந்துள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் அரண்களை உடைத்து வீதிகளுக்குள் புகுந்தனர்.

இதையடுத்து பெரும்பாலும் முகமூடி அணியாத ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறு, சி.பி.டி வழியாக ஃபிளிண்டர்ஸ் வீதி நிலையத்தை நோக்கி நகர்ந்ததால், வன்முறைகள் வெடித்தன.

இதையடுத்து கைதுசெய்யப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதற்காக 5,452 டொலர்கள் அபராதம் விதிக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் பெப்பர் ஸ்பிறே தெளித்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment