குசல் ஜனித் பெரோராவுக்கு கொவிட் தொற்று : தென்னாபிரிக்க தொடரை இழக்கும் வாய்ப்பு - News View

Breaking

Monday, August 16, 2021

குசல் ஜனித் பெரோராவுக்கு கொவிட் தொற்று : தென்னாபிரிக்க தொடரை இழக்கும் வாய்ப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வெடுத்திருந்த குசல் ஜனித் பெரேரா, குணமடைந்து மீண்டும் பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையில் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குசல் ஜனித் பெரேராவை இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், எதிர்வரும் செப்டெம்பர் 02ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகள் கொண்ட தென்னாபிரிக்க அணியுடனான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை அவர் இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வரவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான அனைத்து போட்டிகளையும் கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment