(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கு சிக்கலுடையது என்பதால் ஏதேனுமொரு இடத்தில் தவறிழைக்கப்பட்டாலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பிவிடக் கூடும். எனவே இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதால் சிறிது காலம் செல்லும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பேராயரால் உயிரித்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை. எனினும் இவ்விடயம் தொடர்பிலான உள்ளக விடயங்கள் பல குறித்து பேசப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சு உள்ளிட்ட இந்த விவகாரம் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிறுவனங்கள் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி சுயாதீனமாக செயற்பட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் பிரதானமாக பேசப்பட்டது.
எனினும் இந்த வழக்கு மிகவும் சிக்கலானது என்பதால், ஏதேனும் ஒரு இடத்தில் தவறிழைக்கப்பட்டாலும், சம்பவத்துடன் தொடர்புடையோர் தப்பிவிடக் கூடும் என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதால் சிறிது காலம் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment