அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால், தன்னை தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இரத்துச் செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, பல்வேறு பரிந்துரைகளுடனான அதன் அறிக்கையை கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது.
முந்தைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த 2015 ஜனவரி 08 (2015.01.08) முதல் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னரான 2019 (2019.11.16) காலப் பகுதி வரை மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் குறித்த ஆணைக்குழுவினால் ஆராயப்பட்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
3 பேர் கொண்ட குறித்த ஆணைக்குழுவில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜயதிலக, ஓய்வு பெற்ற பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெனாண்டோ ஆகியோர் அங்கம் வகித்ததோடு, அவ்வாணைக்குழுவின் செயலாளராக பேர்ள் வீரசிங்க நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment