கண்டியில் உள்ள பழைய போகம்பறை சிறைச்சாலை கட்டிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அழிக்கப்பட மாட்டாது என தேசிய மரபுரிமைகள் அரங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
தொல்பொருளியல் துறை மூலம் வர்த்தமானி அறிக்கை செய்யப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சிறைச்சாலை கட்டிடமானது நாட்டின் மிக பெறுமதிமிக்க சொத்தாகும். ஆகவே அதை தகர்த்து இல்லாமல் ஆக்கும் எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் கிடையாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் உள்ள போகம்பறை பழைய சிறை வளாக மேம்பாட்டு திட்டத்தின் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் பங்கேற்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கண்டிக்கு வியஜம் செய்துள்ள இராஜாங்க அமைச்சர் போகம்பறை சிறை வளாகத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டிருந்தார்.
எம்.ஏ. அமீனுல்லா
No comments:
Post a Comment