நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த 5 தினங்களாக கொவிட்-19 கொரோணா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு அதிகளவான மக்கள் இந்த தடுப்பூசியினையும் பெற்றுக் கொண்டுள்ளனர் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். அல் அமீன் றிசாட் தெரிவித்துள்ளார்.
தனது அறிக்கையில் மேலும் தடுப்பூசி நிலையங்களுக்கு வந்து தகுந்த காரணங்களுக்காக தடுப்பூசியினை பெற முடியாமல் இருப்பவர்களுக்கான நடமாடும் தடுப்பூசி நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறோம்.
இந்த தடுப்பூசியினை 30 க்கு வயதிற்கு மேற்பட்ட விஷேட தேவையுடையவர்கள், இத்தா கடமையில் இருக்கும் முஸ்லிம் பெண்கள், நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருப்பவர்கள், தவிர்க்க முடியாத காரணத்தால் வீட்டை விட்டு வெளிச் செல்லாமல் இருப்பவர்களுக்கான தடுப்பூசிகளை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார மாதுக்கள் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளனர்.
வீட்டிலிருந்து வெளியேற முடியாதவர்கள் உங்களது பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை உங்களது பிரிவுக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் தொடர்பு கொண்டு/ அவர்களுடை இலக்கத்திற்கு உங்களுடைய விபரத்தினை குறுஞ் செய்தி (SMS அனுப்புவதன்) மூலம் உங்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment