நாட்டை விட்டு தப்பிச் சென்றார் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி : சிறையில் அடைக்கப்பட்டிருந்த போராளிகளை விடுவித்த தலிபான்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 15, 2021

நாட்டை விட்டு தப்பிச் சென்றார் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி : சிறையில் அடைக்கப்பட்டிருந்த போராளிகளை விடுவித்த தலிபான்கள்

தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றும் விளிம்பில் இருப்பதால் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் தேசிய நல்லிணக்க கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா ஒரு ஆன்லைன் காணொளியில் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறியதை உறுதிபடுத்தினார்.

அதேநேரம் அஷ்ரப் கானி தலைநகர் காபூலில் இருந்து தஜிகிஸ்தானுக்கு சென்றுள்ளார் என்று ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை துணைத் தலைவர் அம்ருல்லா சலேவும் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானைச் சுற்றியுள்ள முக்கிய நகரங்கள் 10 நாட்களில் தலிபான் தீவிரவாதிகளின் வசம் ஆனமையினால் அஷ்ரப் கானி பதவியை இராஜினாமா செய்ய அதிக அழுத்தத்துக்கு உள்ளானர்.

இது இவ்வாறிருக்க ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய சிறையான காபூலில் உள்ள புல்-இ-சர்கி சிறையிலிருந்த கைதிகள் விடுவிக்கப்பட்டதை தலிபான் சார்பு செய்தி நிறுவனம் ஆன்லைனில் வெளியிட்ட காட்சிகள் வெளிக்காட்டுகின்றன.

அங்குள்ள மிகப்பெரிய சிறைச்சாலையான புல்-இ-சர்கிக்குள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தலிபான்கள் ஆயுதமேந்திய போராளிகள் குழு நுழைந்தனர். அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த தலிபான்களை அடையாளம் கண்டு அவர்களை போராளிகள் விடுவித்தனர். 

முன்னதாக, பக்ராம் விமானப்படை தளத்தில் உள்ள சிறையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு தாலிபன்கள் கொண்டு வந்தனர்.

பாக்ராம் சிறைச்சாலையில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவினர், தாலிபன்கள், பிற தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் உள்பட சுமார் ஐந்தாயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment