முழு உடலும் கட்டப்பட்ட நிலையில் சங்குப்பிட்டி கடலிலிலிருந்து சடலமொன்று மீட்பு - News View

Breaking

Sunday, August 29, 2021

முழு உடலும் கட்டப்பட்ட நிலையில் சங்குப்பிட்டி கடலிலிலிருந்து சடலமொன்று மீட்பு

முழு உடலும் கட்டப்பட்ட நிலையில் பூநகரி, சங்குப்பிட்டி கடலிலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் கடற்பரப்பில் மீன் வலையில் சிக்குண்ட நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக நேற்றையதினம் (28) சாவகச்சேரி மற்றும் பூநகரிப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட குறித்த சடலம் கொலை செய்யப்பட்டு கடலில் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதுவரை குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

(சாவகச்சேரி விசேட நிருபர் - சுபேஷ்)

No comments:

Post a Comment