கட்டாயம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள், கை வைத்தியம் செய்ய வேண்டாம், ஒரே இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் - வைத்திய நிபுணர் பேரானந்தராஜா - News View

About Us

About Us

Breaking

Saturday, August 14, 2021

கட்டாயம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள், கை வைத்தியம் செய்ய வேண்டாம், ஒரே இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் - வைத்திய நிபுணர் பேரானந்தராஜா

சிலர் வேறு வேறு வருத்தங்கள் இருக்கின்றது என கூறி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் அவ்வாறானவர்கள்தான் கட்டாயம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டுமென பொது வைத்திய நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினுடைய ஏற்பாட்டில் நடைபெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய ரீதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. மக்கள் கவனமாக இருந்து கொரோனாவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு முன்னின்று உழைக்க வேண்டும்.

இதுவரை 8000 தொற்றாளர்களும், 176 மரணங்களும் யாழ் மாவட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோயை எதிர்கொள்ள இரண்டு வகையான வழிகள் இருக்கின்றது. ஒன்று நோய் தொற்று வராமல் தடுப்பது, மற்றையது தொற்று வந்ததன் பின்பு வைத்தியசாலை சிகிச்சை முறை.

30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதனை கட்டாயம் அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சிலர் வேறு வேறு வருத்தங்கள் இருக்கின்றது என கூறி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் அவ்வாறானவர்கள்தான் கட்டாயம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வாமை சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தால் தடுப்பூசி போட செல்லும்போது அங்குள்ள வைத்தியர்களுடன் பேசினால் அதற்குரிய நடவடிக்கையை அவர்கள் எடுப்பார்கள்.

மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், மரணச் சடங்குகள் போன்ற சந்தர்ப்பங்களில் ஒரே நேரத்தில் பல பேர் கூடுவதால் ஒருவருடைய உடலில் இருந்து நோய் இன்னொருவருக்கு தாக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றது. ஆகவே தேவையற்ற விதத்தில் ஒன்றுகூடலை தவிர்ப்பது சிறப்பானது.

மூக்கையும் வாயையும் மூடிய வகையில் சரியாக முகக் கவசங்களை அணிய வேண்டும். கதைக்கும்போது முகக் கவசங்களை கழட்டாமல் கதைக்க வேண்டும். வெளியில் சென்று வந்தால் கைகளை சவர்க்காரங்கள் கொண்டு கழுவுதல் சிறப்பானது.

இருவருக்கிடையில் இரண்டு மீட்டர் இடைவெளியில் நாங்கள் பின்பற்ற வேண்டும். கை கொடுத்தல் கட்டிப்பிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முடிந்தளவுக்கு வீட்டிலிருந்தபடி உங்கள் வேலைகளை செய்வதற்கு பழகுங்கள்.

வருத்தங்கள் வரும்போது கை வைத்தியம் கை மருத்துவங்களை செய்வதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு, நோய் நன்றாக பாதிக்கப்பட்ட பின்னர்தான் வைத்தியசாலைக்கு வருகின்றனர். ஆகவே உங்களிடம் நோய்த் தன்மை காணப்படும் பொழுது வைத்தியசாலைக்கு உடனடியாக வரும்போது அவற்றை தவிர்க்க முடியும் என்றார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment