பூப்புனித நீராட்டு விழா விருந்திற்கு சென்ற 48 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Saturday, August 14, 2021

பூப்புனித நீராட்டு விழா விருந்திற்கு சென்ற 48 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

எந்தவொரு அனுமதியும் பெறாமல் பூப்பனித நீராட்டு விழா விருந்தை நடத்திய குடும்பத்தவர்கள் உட்பட 48 பேர் இன்று (14) சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொவிட் தொற்று, உயிரிழப்புக்கள் அதிகரித்ததனை அடுத்து எந்தவொரு விழாக்களும் நிகழ்வுகளும் நடத்த முடியாதெனவும் அவ்வாறு நடாத்தும் பட்சத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களே பங்கு பெற முடியும் என சுகாதார பிரிவினரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில், நோர்வூட் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா விருந்தொன்று சுகாதார பிரிவினரின் அனுமதி பெறாமலேயே நடாத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு சென்ற அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், குடும்பத்தவர் என 48 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அவர்களது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், அதிகளவான உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad