புதிய டெல்டா பிறழ்வுக்கு தடுப்பூசிகள் தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகமுள்ளது என்கிறார் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர - News View

Breaking

Tuesday, August 31, 2021

புதிய டெல்டா பிறழ்வுக்கு தடுப்பூசிகள் தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகமுள்ளது என்கிறார் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர

(ஆர்.யசி)

வெவ்வேறு மாறுபட்ட மூன்று பிறழ்வுகள் ஒன்றிணைந்து இலங்கையில் புதிய திரிபுபட்ட டெல்டா வைரஸ் உருவாகும் நிலை ஆய்வுகளில் அவதானிக்க முடிகின்றது. ஆகவே புதிய திரிபுபட்ட டெல்டா வைரஸ் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், இப்போதும் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா வைரஸ் மாற்றமடைந்து வருகின்றது என்பதை மாத்திரம் உறுதியாக கூற முடியும் எனவும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா வைரஸ் திரிபுகள் குறித்தும் அதன் அச்சுறுத்தல் தன்மை குறித்தும் நிபுணர்கள் அவதானம் செலுத்தி வருகின்ற நிலையில் தற்போதைய ஆய்வு நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், குறிப்பாக ‘எஸ்’புரோட்டீன் தன்மைகளில் பிறழ்வுகள் ஏற்படும் நிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் டெல்டா பிறழ்வுக்கு தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறான பொதுவான மூன்று பிறழ்வுகளும் இலங்கைக்கு என்ற ஒரு பிறழ்வுகள் உள்ளது.

ஒன்றில் இலங்கைக்கும் மலேசியாவிற்கும் ஒத்த பிறழ்வும், ஒன்றில் ஏனைய பல நாடுகளில் உள்ள பிறழ்வும் மற்றைய ஒன்று இலங்கைக்கு மட்டுமே உரித்தான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த மூன்று பிறழ்வுகளும் ஒன்றிணைந்து இலங்கையில் புதிய திரிபுபட்ட டெல்டா வைரஸ் உருவாகும் நிலை உள்ளது.

No comments:

Post a Comment