போலி தடுப்பூசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - News View

Breaking

Friday, August 6, 2021

போலி தடுப்பூசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி அட்டைகளைப் போன்று, தடுப்பூசியை ஏற்றாத சிலர் தடுப்பூசி அட்டைகளை களவாடி அதை வெறுமனே போலியாக நிரப்பி வைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுனண் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெறுமனே போலியாக நிரப்பிய அட்டைகளை வைத்துக் கொண்டிருந்தால் அது சட்டப்படி நீங்கள் அரசாங்கத்தை ஏமாற்றுகிறீர்கள் என்ற அடிப்படையில், தங்களின் உத்தியோகத்தை இழந்து, சலுகைகளை இழந்து சிறைக்குள் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

போலிகளை நம்பி உங்களை நீங்கள் இழந்து விடாதீர்கள். Covid-19 இற்கான தடுப்பூசி வழங்கலின் போது தகவல்கள் அனைத்தும் கணனியில் அதற்குரிய Tracker எனப்படும் மென்பொருளின் மூலம் பதியப்பட்டு வருகின்றது. அதில் தடுப்பூசி ஏற்றியவர்களின் சகல விடயங்களும் உள்ளன.

எதிர்காலத்தில் அலுவலக ரீதியாக அல்லது சட்ட ரீதியாக அல்லது வெளிநாட்டிற்கு செல்லும் போது பாவிக்க வேண்டிய அத்தாட்சி ரீதியாக கணனியில் பதியப்பட்ட மென்பொருளின் மூலம் கிடைக்கின்ற சான்றிதழ் மிக அவசியமாகத் தேவைப்படும் என்றார்.

(நிந்தவூர் நிருபர்)

No comments:

Post a Comment