கொவிட் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் மனித உயிர்களை பாதுகாத்துக் கொள்ள முன்னுரிமை வழங்குவது முக்கியமாகும் என விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்ணாந்து தெரிவித்தார்.
நாடு முடக்கப்படுள்ள நிலைமையிலும் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பாக தெரிவிக்கையிலேயே விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்ணாந்து இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக உலக சுகாதார அமைப்பினால் நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள் குழுவினால் பூரண அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அந்த அறிக்கையை எமது சங்கம் அங்கீகரிக்கின்றது.
கொவிட் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு செல்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் இந்த வேலைத்திட்டத்தின் இலக்கை அடைந்து கொள்ளும் வரை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை கடுமையாக்கி பயணக் கட்டுப்பாடுகளை மேலும் இருக்கமாக்க வேண்டும். அதன் மூலமே அதிகரித்துச் செல்லும் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment