ஓக்டோபரில் நாடு மிக மோசமான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ​- சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Monday, August 30, 2021

ஓக்டோபரில் நாடு மிக மோசமான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ​- சம்பிக்க ரணவக்க

(நா.தனுஜா)

உலக சந்தையில் சீனியின் விலையை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இலங்கையில் அனைத்து செலவுகளையும் சேர்த்ததன் பின்னர் ஒரு கிலோ கிராம் சீனியை 98 ரூபாவிற்கு சந்தைக்கு வழங்க முடியும். ஆனால் அரசாங்கத்தினால் அதற்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கிய முறைகேடான வாய்ப்புக்கள் மற்றும் கடந்த வருடம் ஓக்டோபர் மாதத்திலிருந்து இடம்பெற்று வரும் பாரிய சீனி மோசடி ஆகியவற்றின் காரணமாகவே தற்போது ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 220 ஆக அதிகரித்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அதுமாத்திரமன்றி உரியவாறான திட்டமிடல்கள் அற்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டின் பயிர்ச் செய்கையும் சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

எனவே எதிர்வரும் சில மாதங்களுக்குத் தேவையான உணவுற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்படா விட்டால், எதிர்வரும் ஓக்டோபர் மாதமளவில் நாடு மிக மோசமான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment