நித்திரையில் இருந்த பெண்ணின் கழுத்திலிருந்த 3 பவுண் தங்கச் சங்கிலி கொள்ளை - மட்டக்களப்பில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Monday, August 30, 2021

நித்திரையில் இருந்த பெண்ணின் கழுத்திலிருந்த 3 பவுண் தங்கச் சங்கிலி கொள்ளை - மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து அவரின் கழுத்தில் இருந்த 3 பவுண் தங்க சங்கிலியை நபர் ஒருவர் பறித்து சென்ற சம்பவம் இன்று திங்கட்கிழமை (30) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் உரிமையாளர் தனது வீட்டை இடித்து புனரமைத்து வருகின்ற நிலையில் அதே காணியில் தற்காலிகமாக வீடு ஒன்றை அமைத்து வசித்து வருகின்ற நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணிக்கு வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் வயதான மாமரியர் உட்பட 3 பேர் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் அமைக்கப்பட்ட தற்காலிக வீட்டின் தகர கதவை திறந்து வீட்டிற்குள் புதுந்த கொள்ளையர் ஒருவர் உறக்கத்தில் இருந்த 45 வயதுடைய பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றித் தருமாறும் இல்லாவிட்டால் கத்தியால் வெட்டி கொலை செய்வதாக மிரட்டியதையடுத்து கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி கொடுத்த நிலையில் அதனை பறித்தெடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வீட்டிற்கு பொலிஸ் தடயவியல் பகுப்பாய்வு பிரிவினர் சென்று கொள்ளை தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment