தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதற்கான சான்றிதழ் : கட்டாயப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Monday, August 2, 2021

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதற்கான சான்றிதழ் : கட்டாயப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு

கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக் கொண்டதற்கான சான்றிதழ் அட்டையை ஒவ்வொருவரும் தம்மிடம் வைத்திருப்பதை கட்டாயப்படுத்துவது தொடர்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விசேட குழு கவனம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக அரச நிறுவனங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பிரவேசிக்கும் நபர்கள் அந்த அட்டையை தம் வசம் வைத்திருப்பதை கட்டாயப் படுத்துவதன் முக்கியம் தொடர்பில் சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அது தொடர்பில் மேற்படி விசேட குழு விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

அது தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் மேலும் சில கட்டளைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment