கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவரா நீங்கள் ? - News View

About Us

About Us

Breaking

Sunday, August 8, 2021

கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவரா நீங்கள் ?

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள், குறித்த தொற்றாளருக்கு தொற்று உறுதிப்பட்டு 3 - 5 நாட்களுக்குள் தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்று ஐ.நா.வின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிய வழிகாட்டலை வெளியிட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலாநிதி சந்திம ஜீவந்தர தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இதற்கு முன்னர் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் 5 - 7 நாட்களில் கொவிட் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் அறிகுறிகள் காணப்படுமாயின் அன்டிஜன் பரிசோதனை செய்து கொள்வதே தொற்றை உறுதிப்படுத்திக் கொள்ள போதுமானது. ஆனால் தொற்று அறிகுறிகள் தென்படவில்லை எனில் பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்வதே பொறுத்தமானது.

எனது அனுபவத்தின் படி விரைவான பரிசோதனைகள் பெரும்பாலான சந்தர்ப்பத்தில் தவறான முடிவுகளையே வெளிப்படுத்தியுள்ளன. இது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகுமே தவிர, இலங்கையின் வழிகாட்டல் அல்ல.

No comments:

Post a Comment