இலங்கை உட்பட ஆறு ஆசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான பயணக் கொள்கையை புதுப்பித்தது கட்டார் - News View

About Us

About Us

Breaking

Monday, August 2, 2021

இலங்கை உட்பட ஆறு ஆசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான பயணக் கொள்கையை புதுப்பித்தது கட்டார்

இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட ஆறு ஆசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தனது பயணக் கொள்கையை கட்டார் புதுப்பித்துள்ளது.

அதன்படி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) முதல் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து கட்டார் வரும் பயணிகள் கட்டாயம் இரண்டு நாள் ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.

ஹோட்டல் தனிமைப்படுத்தல் காலத்தில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். சோதனை முடிவுகளில், அவர் சோதனைக்கு எதிர்மறையாக முடிவினை வெளிப்படுத்தினால் குறித்த பயணி தனிமைப்படுத்தலிலிருந்து வெளியேற அனுதிக்கப்படுவார் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏனைய பயணிகள் தொடர்ந்தும் 10 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

2.3 மில்லியன் வெளிநாட்டவர்கள் உட்பட 2.7 மில்லியன் மக்களைக் கொண்ட கட்டார், டிசம்பர் 23 அன்று வைரஸுக்கு எதிராக வெகுஜன தடுப்பூசி திட்டங்களை தொடங்கியது.

ஃபைசர் பயோஎன்டெக், மொடேர்னா, அஸ்ட்ராசெனெகா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகளைப் பயன்படுத்த அங்குள்ள சுகாதார அதிகாரிகள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

கடந்த மாதம், கட்டார் உள்துறை அமைச்சகம் சுற்றுலா மற்றும் குடும்ப நுழைவு விசா வழங்குவதை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது.

No comments:

Post a Comment