மஹேலவின் பயிற்சியில் சவுத்தன் பிரேவ் அணி ‘தி ஹன்ட்ரட்' கிண்ணத்தை சுவீகரித்தது - News View

About Us

About Us

Breaking

Sunday, August 22, 2021

மஹேலவின் பயிற்சியில் சவுத்தன் பிரேவ் அணி ‘தி ஹன்ட்ரட்' கிண்ணத்தை சுவீகரித்தது

அதிரடி ஆட்டம் நிறைந்த லோர்ட்ஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பர்மிங்காம் பீனிக்ஸ் அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் சவுத்தன் பிரேவ் அணி ஆண்களுக்கான ‘தி ஹன்ட்ரட்' முதல் கிண்ணத்தை கைப்பற்றியது.

இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள 100 பந்துகள‍ை கொண்ட தி ஹன்ட்ரட் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் பர்மிங்காம் பீனிக்ஸ் மற்றும் சவுத்தன் பிரேவ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மொய்ன் அலி தலைமையிலான பர்மிங்காம் பீனிக்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான சவுத்தன் பிரேவ், 100 பந்துகள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் ஸ்டிர்லிங் 61 (36) ஓட்டங்களையும், ரோஸ் வைட்லி 44 (19) ஓட்டங்களையும், அலெக்ஸ் டேவிஸ் 27 (20) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
169 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பர்மிங்காம் பீனிக்ஸ் அணியால் 100 பந்துகள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

அணி சார்பில் அதிகபடியாக லிவிங்ஸ்டன் 46 (19) ஓட்டங்கயைும், மொய்ன் அலி 36 (30) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

இதன் மூலம் 32 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற சவுத்தன் பிரேவ் அணி முதல் ‘தி ஹன்ட்ரட்' ஆண்களுக்கான கிண்ணத்த‍ை கைப்பற்றியது.

இது இவ்வாறிருக்க வாகை சூடிய சவுத்தன் பிரேவ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன என்ற படியால் இலங்கை ரசிகர்கள் மத்தியிலும் தற்சமயம் இப் போட்டியின் முடிவுகள் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹலே ஜெயவர்தன முன்னதாகவே இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு, அணிக்காக மூன்று கிண்ணங்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment