இலங்கை வந்தடைந்தது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி - News View

Breaking

Thursday, August 26, 2021

இலங்கை வந்தடைந்தது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி

வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்க அணி இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளது.

தென்னாபிரிக்க அணி தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் மூலமாக இன்று அதிகாலை 2.15 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்த அதிகாரிகள் குழு, அணியினரை வரவேற்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த தென்னாபிரிக்க அணியினர் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், போட்டிகள் தொடங்கும் வரை அவர்கள் உயிரியல் பாதுகாப்பு குமிழியில் இருக்க வேண்டும்.

மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட இச் சுற்றுப் பயணத்தின் அனைத்து ஆட்டங்களும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment