இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மூதாட்டியின் பரிதாப நிலை ! - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மூதாட்டியின் பரிதாப நிலை !

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 74 வயதான மூதாட்டியை உறவினர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காததால், மூன்று நாட்களாக வீட்டிற்கு வெளியில் தங்கியுள்ள சம்பவம் ஒன்று பல்லேவெல, நுங்கமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் மூதாட்டிக்கு வீட்டிலுள்ள உறவினர்கள் உணவு, நீர் எதுவும் வழங்க மறுத்துள்ள நிலையில், அயலவர்களின் உதவியுடன் அவர் நாட்களை கடத்தி வருகிறார்.

குறித்த மூதாட்டி, தன் சகோதரனுடன் நீண்ட காலமாக அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில்அண்மையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மீரிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சிகிச்சை மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு பத்து நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு, 21 ஆம் திகதி இரவு தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரது சகோதரன் வீட்டு கதவை திறந்து, அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, குறித்த மூதாட்டி வீட்டின் வெளிப்புற படிக்கட்டிலேயே அவர் தங்கியுள்ளார். அத்துடன் சிகிச்சை மையத்தில் தான் அணிந்திருந்த ஆடைகளையே தான் இன்னும் அணிந்திருப்பதாகவும், ஒரு ஆடையை எடுப்பதற்கு அறைக்கு செல்லக்கூட சகோதரன் அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை அவரது மகள் கந்தலம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணிபுரிந்து வருவதாகவும், ஊரடங்கு காரணமாக அவரால் தான் இருக்குமிடத்திற்கு வர முடியவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் இதில் தலையிட்டு, மூதாட்டியை வீட்டுக்குள் அனுமதிக்கும்படி சகோதரனை அறிவுறுத்தியபோதும், அவர் மூதாட்டியை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment