கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 85 வீதமானோர் ஏதேனுமொரு நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ - News View

Breaking

Monday, August 30, 2021

கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 85 வீதமானோர் ஏதேனுமொரு நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களில் பெருமளவானோர் அதாவது 85 சதவீதமானோர் ஏதேனுமொரு நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில் 53 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாவர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் ஆகஸ்ட் 13 ஆம் திகதி வரை 6985 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறு பதிவான மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட மதிப்பீடுகளில் 2261 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. இது நூற்றுக்கு 53 சதவீதமாகும்.

இதே போன்று 52 சதவீதமானோர் அதாவது 2202 பேர் உயர்த்த இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாவர். மேலும் 24 வீதமானோர் அதாவது 1001 பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களார்.

இதே போன்று 18 சதவீதமானோர் அதாவது 800 பேர் சிறுநீரக நோயாலும், 445 பேர் அதாவது 10 சதவீதமானோர் ஏனைய நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்களாவர் என்பதும் சுகாதார அமைச்சின் மதிப்பீடுகளில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment