நிதி மோசடி வழக்கு தொடர்பில் ETI நிதி (ETI Finance) நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் வழங்கி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ரூ. 7 பில்லியன் வைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு இன்று (03) எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டு, பின்னர் சந்தேகநபர்களை, தலா ஒரு இலட்சம் கொண்ட ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 50 இலட்சம் கொண்ட இரண்டு தனிப்பட்ட பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 08ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நகை விற்பனை எனும் போர்வையில் நாடளாவிய ரீதியில் ETI கிளைகளை நிறுதி, அதில் வைப்பிடுபவர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 7 பில்லியன் வைப்புகளை பெற்றுக்கொண்டு அதனை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகநபர்கள் மீது, சட்ட மாஅதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment